mudakkathan keerai dosai recipe in tamil

mudakkathan keerai dosai recipe in tamil

Tamil traditional foods

 பாரம்பரிய முடக்கத்தான் கீரை தோசை செய்வது எப்படி


முடக்கறுத்தான்(முடக்கத்தான்) 

முடக்கத்தான் கீரை தோசை



கிராமப்புறங்களில் வேலிகளில் கொடி போல படர்ந்து வளரக்கூடியது.பெயருக்கு எற்றார்போல வலிகளை விரட்டும் சக்தி கொண்டது. முடக்கு வாத பிரச்சனைகளுக்கு இடு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

மேலும் இருமலுக்கு மிக நல்ல அருமருந்தாக செயல்படுகிறது.இருமல் வரும் போது முடக்கத்தான் பொடியை வெற்று சாதத்தில் கலந்து சாப்பிட இருமல் குணமாகும்.

இப்படி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட இந்த கீரையை தோசை,இட்லி என பல்வேறுவகைகளில் உணவாக சேர்த்து கொள்ளலாம்.

இந்த பதிவில் பாரம்பரிய முறைப்படி முடக்கத்தான் தோசை செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்;

புழுங்கல் அரிசி--ஒரு கப் அல்லது 250 கிராம்
முடக்கத்தான் கீரை-இரண்டு கைப்பிடி அளவு.
உப்பு: தேவையான அளவு.



செய்முறை: அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து 2 மணி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.அதே வேளையில் இரண்டி கைப்பிடி அளவு முடக்கத்தான் கீரையை எடுத்து பூச்சிகள் இல்லாமல் பிரித்து அதையும் சுத்தமாக கழுவி வைத்து கொள்ளவும்.
அரிசி நன்றாக ஊறியதும் அரிசி மற்றும் கீரையை ஒன்றாக அரைத்து கொள்ளவும்.
பிறகு மாவு நன்றாக புளித்த பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து தோசையாக வார்த்து எடுக்கலாம்.
 இதனை தேங்காய் சட்னியோடு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்