child tamil kavithai
குழந்தை தமிழ் கவிதைகள்
மழையில் நனையும் மழலை தமிழ் கவிதை
உந்தன் மேனி தொட்ட மோகத்தில்
மழைத்துளிகள் மயங்கி போகின்றன
அங்கம் வழிந்தோடிய துளிகள்
ஆரவாரம் செய்கின்றன
கன்னக்குழியில் குடியேறிய தண்ணீர்
கரும்பாய் இனிக்கின்றது
உன் சந்தோழ புலம்பலில்
சகலமும் அமைதியானது
மழைநீரும் பிறவிபலனடைந்தது உன்னால்
இராட்டினம் சுற்றினாய்
குதித்தாடினாய்
கும்மாளம் போட்டாய்
அந்த சின்ன சின்ன அசைவுகளில்
சிக்கி தவித்தது என் மனது
மழைத்தண்ணீர் மண்ணெடுத்து
மஞ்சளாய் இட்டுக்கொண்டாய்
உந்தன் தாயவள் குரல் கேட்டு
பயத்தில் மழைநீரில் படுத்தெழுந்தாய்
மழையில் நனையும் மழலையே
உன் அன்னையவள் சேலை
அழைக்கின்றது வந்துவிடு.........
கருத்துகள்
கருத்துரையிடுக