முதியோர் இல்லம் - tamil kavithaigal- tamil poetry

முதியோர் இல்லம் tamil kavithai

muthiyor illam (oldage home ) tamil poetry

 
oldage home

  @@@முதியோர் இல்லம்@@@

முதியோர் இல்ல வாசலில்
நீ விட்டுச் சென்றபோது
அன்னையவள் கதறுகிறாள்
மகனே உன் முகம் பார்த்தே
நான் மூலையில் இருந்துவிடுகிறேன்
நீ உ
ண்ட மிச்சம் உண்டு வாழ்ந்து விடுகிறேன்
இல்லையேல் பால் தந்த தாயெனக்கு
பாசானம் வாங்கி கொடு
உன் கண்முன்னே இறந்துவிடுகிறேன்
எனை மட்டும் விட்டுச் செல்லாதே........
அடே மனிதா உனக்கு
நான் ஒன்று சொல்கிறேன் கேள்
தாயவள் பாசம் தனை
தாரத்திடம் அடகு வைத்த மூடனே
வந்தவள் சொல்கேட்டு
பெற்றவளை புறந்தள்ளாதே
உனக்கும் காலம் வரும்
உன் பிள்ளைகளும் வளர்ந்துவிடும்
உன் வினை உனையே அறுத்து விடும்
இதை எப்போது உணரப்போகிறாய்
மதி கெட்ட மானிடனே
இனியாவது திருந்தி விடு பெற்றோரை காத்துவிடு.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்