REPUBLIC DAY POETRY IN TAMIL குடியரசு தின கவிதை
REPUBLIC DAY TAMIL POETRY
குடியரசு தின கவிதை
தன்னுயிர் தந்து -நம்
மண்ணுயிர் காக்க
செங்குருதி சிந்தி
நெஞ்சுறுதியோடு
நெடுங்களம் புகுந்து
பரங்கியர் படைபலம் உடைத்து
தடைகளை ஒருபுறம் தகர்க்க அடக்குமுறை விலங்குதனை
அவிழ்த்திடும் பணியதை
அகிம்சையால் மறுபுறம் முடிக்க
கிடைத்தது சுதந்திரம்....
போதும் இந்த மன்னராட்சி
இனி இங்கு மக்களாட்சி
மலர்ந்திட வேண்டி
நமக்கென தனி சட்டம்...
நமக்கென தனி அரசியல் சாசனம்...
நம்மில் ஒருவராய்
நமக்கொரு தலைவன்- இப்படி
தனி உரிமை கொள்கைகளால் தன்மானம் காத்து நிற்க
வந்ததுதான் இந்த குடியரசு...
பவளவிழா படிக்கட்டில்
தடம் பதிக்கவிருக்கும் இந்த நேரத்தில்
இனம் மொழி மதம் பாராமல்
இந்தியன் என்ற ஒற்றை வார்த்தையில்
ஓரணியாய் திரள்வோம்
சமத்துவம் காண்போம்....
கருத்துகள்
கருத்துரையிடுக