Pregnancy time foods in tamil ,கர்ப்ப காலத்தில் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள்
கர்ப்ப காலத்தில் தினமும் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்
PREGNACY TIME FOODS IN TAMIL , DAILY FOODS DURING PREGNACY
இன்றைய காலகட்டத்தில் கருவுறுதல் விகிதம் மிகவும் குறைந்து வருகிறது.இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுபவை இன்றைய வாழ்க்கை முறை,உணவு பழக்க வழக்கங்கள்,நாம் செய்யும் வேலையின் பளு போன்றவைகள் தான்.
இந்த பதிவில் கருவுற்ற பிறகு நாம் என்ன என்ன உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என்பதனை விரிவாக பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிகம் ஏற்படும் பிரச்சனை இரத்த சோகை நோய்.இரும்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்வதன் மூலம் இந்த பிரச்சனையை சரி செய்யலாம் இந்த பதிவில் இரும்புசத்து அதிகம் உள்ள உணவுகளையும் பட்டியல் இட்டுள்ளோம்.
1) பேரீச்சம் பழம்-DATES
பேரீச்சம் பழத்தில் இரும்புசத்து அதிக அளவில் உள்ளது, அது போல பொட்டாசியம்,கால்சியம்,பாஸ்பரஸ், விட்டமின் போன்ற சத்துகளும் அதிக அளவில் உள்ளன.இதனை உண்பதன் மூலம் இரத்த சோகை நோய் வராமல் தடுக்கலாம்.
எடுத்துகொள்ள வேண்டிய அளவு: தினமும் காலை 3 பழம், மாலை 3 பழம் எடுத்துகொள்ள வேண்டும்.
2)மாதுளம்பழம்-POMEGRANATE
மாதுளம்பழத்தில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது,மேலும் ஆண்டி ஆக்சிடெண்ட் இருக்கிறது.மாதுளம் பழம் எடுத்துகொள்வதன் மூலம் இரத்த விருத்தி அதிகமாகும்.கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்து கொண்டே போகும் அதனை சரி செய்ய இது உதவும்.
எடுத்து கொள்ளவேண்டிய அளவு : ஒரு நாளைக்கு ஒரு பழம்.
3)மண்ணீரல்,கல்லீரல் - SPLEEN,LIVER
ஆட்டின் மண்ணீரல் மற்றும் கல்லீரல் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ஒரு மாமருந்து.இதிலும் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.மேலும் புரதம்,வைட்டமின் ஏ,போலிக் அமிலம் போன்ற சத்துகள் உள்ளன.
எடுத்து கொள்ள வேண்டிய அளவு: வாரத்திற்கு 2 அல்லது 3 முறை மதிய உணவில் எடுத்து கொள்ளவேண்டும்.
4)வால்நட்-அக்ரூட்-WALNUT
இதில் வைட்டமின் பி வைட்டமின் ஏ வைட்டமின் பி 12,கால்சியம்,ஒமேகா 3 பேட்டி ஆசிட்,ஆண்டிஆக்சிடெண்ட் அதிக அளவில் உள்ளது.மேலும் கொழுப்பை குறைக்கும்,
மேலும் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
எடுத்து கொள்ள வேண்டிய அளவு: தினமும் காலை 5-6 வால்நட்டை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைட்த்து சாப்பிட வேண்டும்.
5) கீரை வகைகள்-SPINACH
அனைத்து வகையான கீரைவகைகளிலும் வைட்டமின் பி, வைட்டமின் ஏ,நார்சத்து,புரதம்,இரும்பு சத்து அதிக அளவில் காணப்படுகின்றன.முருங்கை கீரை அதிகம் சேர்த்து கொள்வதன் மூலம் இரும்பு சத்து அதிக அளவில் கிடைக்கிறது.
எடுத்துகொள்ளவேண்டிய அளவு: தினமும் வெவ்வேறு கீரை வகைகளை மதிய உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
6)பால்-MILK
பாலில் அதிக அளவில் புரதம் மற்றும் கால்சியம் சத்துகள் இருக்கின்றன.
தினமும் காலை மாலை 100 மிலி வீதம் சேர்த்து கொள்ள வேண்டும்.வெள்ளை சர்க்கரை பாலில் சேர்க்காமல் நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக