LOVERS DAY KAVITHAI 90'S LOVE
KATHALARTHINA KAVITHAI
LOVERS DAY KAVITHAI
காதலர் தின கவிதை (90's காதல்)
காதலர் தின கவிதை (90's காதல்)
காலம் கடந்தும்
காதலர் தினம்
கொண்டாட விழைகிறோம்
காதலை காமமாக்கிய
சமூகத்தின் நடுவில்
காதலை காவியமாய்
காப்பாற்ற நினைக்கிறோம்
இன்னமும் காதல் கண்ணியமாய்
இருப்பது எங்களிடத்தில் மட்டும்தான்
பொறுப்புகளை சுமந்து சுமந்து
பொதிமூட்டையாய் அல்ல
பொன் கற்களாய் மாறி நிற்கிறோம்
காதலை நாங்கள் தேடுவது
பொழுதுபோக்கிற்காக அல்ல
புது வாழ்க்கை துணைக்காகத்தான்
காதலின் பரிணாம வளர்ச்சி
எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை
கட்டுபாடிழந்த வாகனம்
கடைசியில் முட்டி மோதி நிற்பது
எங்களை போன்ற மரத்தில் தான்
என்று நவீன காதல்
நாகரீக காதலாய் மாறுமோ
அன்று அந்த காதல்
எங்கள் கைகளில்
பத்திரமாய் பாதுகாக்கப்படும்....
கருத்துகள்
கருத்துரையிடுக