என் அறிமுகம்
அன்பு தமிழ் உறவுகளுக்கு என் முதல் வணக்கம்,
உங்களோடு நானும் என்னோடு நீங்களும் இந்த புதிய வலைப்பக்கமான "தமிழ்மொழி களஞ்சியம்" மூலம் ஒன்றாக பயணிக்க இருக்கிறோம்.
இன்று முதல் தமிழ் கவிதைகள்,கட்டுரைகள்,மகளிர் நலம், மருத்துவ குறிப்புகள், சமையல் குறிப்புகள்,பாரம்பரிய உணவு குறிப்புகள்,இன்னும் பல தலைப்புகளில் எனக்கு தெரிந்த விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
சரி,, இது முதல் நாள் என்பதனால் என்னைப்பற்றி கொஞ்சம் இங்கு சொல்லி வைக்கிறேன்.
என் பெயர் மணிகண்டன்,
ஊர் வேதாரண்யம்.
தமிழ் ஆர்வம் எனக்கு வருவதற்கு காரணமானவர்களில் முதன்மையானவர் என்னுடைய தாத்தா "தாயுமானவ(ர்)ன்" தான்.உண்மையில் அவர் எனக்கு தாயுமாகவும்,தந்தையாகவும் தான் இருந்தார்.நான் சிறு வயதிலிருந்தே என் தாத்தா பாட்டியிடம் தான் வளர்ந்து வந்தேன். பள்ளிகளில் இலக்கியமன்ற விழாக்களில் பேச்சு போட்டி,கட்டுரை போட்டிகளில் கலந்துக்கொள்ள சொல்லி முதன் முதலில் எனை மேடையேற்றியவர் என் தாத்தா தான்.
அடுத்ததாக தமிழ் கவிதைகளின் பக்கம் என்னை திருப்பியது என் மாமன் சத்தியமூர்த்தி.அழகான கவிதைகள் மூலம் தமிழின் இனிமையை எனக்கு ஊட்டியவர்.அதன் பின்புதான் கவிதை எழுதுவதற்கு ஆரம்பித்தேன்.
அப்போது தொடங்கிய என் கவி பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் முயற்சி தான் இந்த "தமிழ்மொழி களஞ்சியம்" வலைப்பக்கம்.இந்த வலைப் பக்கத்திற்கு உங்களுடைய ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம்.நிச்சயம் நீங்கள் எனக்கு உறுதுணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இந்த முதல் பதிவை இதனோடு முடிக்கிறேன்.
நன்றியுடன் மணிகண்டன்.
கருத்துகள்
கருத்துரையிடுக